உழவுக்கும்💚உண்டு வரலாறு(பாகம் 1)

GIFTA SEEDS
By -
0
ஒற்றை மனிதனாக இயற்கை வேளாண்மைக்காக இடைவிடாமல் போராடியும்!! இன்று லட்சக்கணக்கான மக்கள் இயற்கை வழி வேளாண்மை மீது ஆர்வம் கொள்ள காரணியும்!! வேளாண்மையின் உண்மை முகம் என்னவென்று இச்சமூகம் தெளிவுக்கொள்ளவும்!! தனது பேச்சாலும் எழுத்தாலும் நிலங்களில் விதைப்பது போல  தமிழகம் எங்கும்  விதைத்த 💫விதைகள் இன்று இயற்கை வேளாண்மைக்கான பயிற்சி பட்டறைகளாக மிளிர்வதும்! வீட்டுக்கு ஓர் விவசாயி❣️என்னும் விதமாய் வீடுகள் தோறும் மாடித்தோட்டங்கள் அமைவதும்!! இயற்கை மீதான தேடல் தொடர்வதும்!! வேளாண்மை மீதான ஆர்வம் மலர்ந்தும்!! தொடர் கதையாக தொடர்கிறது...! இவையெல்லாம் ஓர் தொடக்கமே என்னிலும் இதற்கு வித்திட்ட அந்த ஒற்றை மாமனிதரின்  85 ஆவது அகவை தின திருவிழா🎉🐝 "மரபு விதை நாள்"  #06/04/2023🔥@இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் ஐயா🤠🌾

பசுமை💚இலக்கியம் குறித்த ஓர் உரையாடலை தொடங்க வேண்டும் என பல முறை நினைத்ததுண்டு. இருப்பினும் அதற்கு ஏற்ற🦋நேரம் இன்று 😃 கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. இனி இத்தொடரின் வாயிலாக இதுவரை நான் அறிந்த சில சூழலியல்💚நூல்களை குறித்தும், வருங்காலங்களில் அறியவிருக்கும் பல 💚🌾சார்ந்த 📖📚 குறித்தும் பேசலாமே!!😎🤗என்ன சொல்லுறீங்க¿😂😊

சரியா சொல்லனும்னா...🤔ஒரு ஐந்தரை ஆண்டுகளுக்கு முன்பு விவசாயம் குறித்த புரிதலை ஏற்படுத்தியதும்!! நான் வாசித்த முதல்💚📖 இயற்கையும் 💚🌾வேளாண்மையும் சார்ந்த ஓர் புத்தகம். 

"உழவுக்கும் உண்டு வரலாறு💪 "

நூல் ஆசிரியர்: டாக்டர் கோ. நம்மாழ்வார்
முதற்பதிப்பு: மே,2008

வேளாண்மையின் உண்மை முகம் என் துவக்கம் கொண்டு பசுமை புரட்சி என்ற பெயரில் நிகழ்ந்த நாடகத்தின் அனைத்து அத்தியாயங்களையும் அடித்து நொறுக்கி, உழவர்களுக்கான நூலாக, கடந்த ஐம்பது ஆண்டுகளில் இந்திய வேளாண்மை  வஞ்சிக்கப்பட்டதற்கான வரலாற்றையும் சேர்த்தே பதிவு செய்கிறது இந்நூல். 

Post a Comment

0Comments

Post a Comment (0)